For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீறிய இயற்கை, பொத்துக் கொண்ட வானம்.. புரண்டோடும் ஆறுகள், திணறும் வட இந்தியா

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வட இந்தியாவில் பெய்து வரும் கன மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு எடுத்துள்ளது. ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

வட இந்தியாவில் பருவ மழை துவங்கிய உடனே கன மழையாக உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை, யமுனை, மந்தாகினி ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. கன மழையால் உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, டெல்லியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.

ரிஷிகேஷ்

ரிஷிகேஷ்

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கை வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் கட்டிடங்கள்.

ஹேம்குந்த்

ஹேம்குந்த்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹேம்குந்தில் தவித்த யாத்ரீகர்களை மீட்கும் ராணுவ வீரர்கள்.

சோனியா

சோனியா

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை விமானத்தில் இருந்து பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

உத்தரகண்ட மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை விமானத்தில் இருந்து பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங்.

பிஜ்னார்

பிஜ்னார்

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ராணுவ வீரர்கள்.

யமுனா

யமுனா

யமுனை நதி டெல்லியில் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது.

டேராடூன்

டேராடூன்

உத்தரகண்டில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்.

யாத்ரீகர்கள்

யாத்ரீகர்கள்

உத்தரகாசியில் சிக்கிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர். உயிர் பிழைத்த சந்தோஷத்தில் யாத்ரீகர்கள்.

ஹேம்குந்த்

ஹேம்குந்த்

ஹேம்குந்த் பகுதியில் காயமடைந்த ஒருவரை தூக்கிச் செல்லும் ராணுவ வீரர்கள்.

டெல்லி

டெல்லி

யமுனை வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை வேடிக்கை பார்க்கும் மக்கள்.

சமோலி

சமோலி

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமோலி.

ராணுவ வீரர்கள்

ராணுவ வீரர்கள்

சமோலியில் யாத்ரீகர்களை பத்திரமாக மீட்ட ராணுவ வீரர்கள்.

English summary
North India is scared of water now as most parts are flooded which costs valuable lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X