For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம ‘ஸ்மைல் பிங்கி’ தான் விம்பிள்டன் போட்டிக்கு ‘பூவா? தலையா?’ போடப் போறாங்களாம்...!

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் நடை பெற உள்ள விம்பிள்டன் போட்டிக்கான பூவா? தலையா? போடும் பொறுப்பு இந்தியச் சிறுமியான பிங்கிக்கு கிடைத்துள்ளது.

ஜூலை மாதம் 7ம் தேதி லண்டனில் ,கிராண்ட் சென்டர் கோர்ட்டில் நடைபெற உள்ள, உலக புகழ் பெற்ற 'விம்பிள்டன்' ஆடவர் ஒற்றையர் போட்டி முதலில் விளையாடும் வீரரைத் தேர்ந்தெடுக்க பூவா? தலையா? என காசை சுண்டிப் பார்க்கும் வாய்ப்புத் தான் இந்தியச் சிறுமி பிங்கிக்கு தற்போது கிடைத்துள்ளது.

லக்கி கேர்ள் பிங்கி...

லக்கி கேர்ள் பிங்கி...

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிங்கிக்கு தற்போது ஒன்பது வயதாகிறது. பிறவியிலேயே, உதடு கோணலாக இருந்ததால், 4 வயது பூர்த்தியான போது பிங்கிக்கு உதட்டு சீரமைப்பு ஆபரேஷன் செய்யப்பட்டது.

உதட்டுச் சீரமைப்பு...

உதட்டுச் சீரமைப்பு...

பிங்கிக்கு செய்யப்பட்ட உதட்டுச் சீரமைப்பு ஆபரேஷனை முழுமையாக படம் பிடித்த குறும்பட இயக்குனர் மேகன் மைலன், அதனை ‘ஸ்மைல் பிங்கி' என்ற பெயரில் குறும்படமாக வடிவமைத்தார்.

ஸ்மைல் பிங்கி...

ஸ்மைல் பிங்கி...

கோணலான உதட்டுடன் பிறந்த பிங்கி, அதன் காரணமாக சக குழந்தைகளின் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளானது அதில் ஆவணப்படுத்தப்பட்டது. பின்னர், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அவளுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதும், அதன் மூலம் பிங்கி சராசரி சிறுமியாக மாற்றியதுமே ‘ஸ்மைல் பிக்கி'யின் கதைக்கரு.

ஆஸ்கார் விருது...

ஆஸ்கார் விருது...

கிட்டத்தட்ட 39 நிமிடம் ஓடும் 'ஸ்மைல் பிங்கி' குறும்படத்தை மேகன் ஸ்மைலன் .ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைத்தார். 81வது விருது வழங்கும் விழாவில் 'ஸ்மைல் பிங்கி' ஆஸ்கர் விருதினை வென்றது.

சுற்றுப்பயணம்...

சுற்றுப்பயணம்...

இதனால் ஆஸ்கார் நாயகி அந்தஸ்துக்கு முன்னேறிய பிங்கி, அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார்.

பூவா? தலையா?

பூவா? தலையா?

தற்போது அடுத்த கட்டமாக, உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர்கள் மோதும் லண்டன் விம்பிள்டன் போட்டியில் முதல் சர்வீசை யார் அடிப்பது? என்பதற்காக நாணயத்தை சுண்டிவிட்டு பூவா? தலையா? என்பதை தீர்மானிக்கும் பாக்கியம் பிங்கிக்கு கிடைத்துள்ளது.

English summary
Pinki Sonkar, the main protagonist of Oscar winning movie Smile Pinki, is all set to travel from the obscure lanes of a village in northern India to the most coveted event in the English summer calendar - Wimbledon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X