For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீரடி சாய்பாபாவிற்கு 51 தங்கக் காசு மாலை காணிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சீரடி: சீரடியில் உள்ள சாய்பாபா ஆலயத்திற்கு பக்தர் ஒருவர் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்க காசு மாலை ஒன்றை காணிக்கை செலுத்தினார்.

மராட்டிய மாநிலம் சீரடியில் உள்ள சாய்பாபா ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு செல்லும் பக்தர்கள் தங்கம், வைரம், வெள்ளி என பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சாய்பாபாவிற்கு காணிக்கை செலுத்துவார்கள்.

Devotee donate gold coin garland Shirdi Saibaba

டெல்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 51 தங்கக்காசுகள் அடங்கி மாலை ஒன்றை இன்று காணிக்கை செலுத்தினார். 521 கிராம் கொண்ட இந்த தங்க மாலையின் மதிப்பு 16.28 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2009-10-ம் ஆண்டு சீரடி கோவில் வருவாய் ரூ. 196 கோடியாக (இந்திய ரூபாய்) இருந்தது. கடந்த ஆண்டு அது ரூ. 298 கோடியாக அதிகரித்தது. பணம் மட்டுமின்றி தங்கம், வெள்ளி நகைகளும் உண்டியல் மூலம் ஏராளமாக கிடைக்கிறன.

கடந்த 4 ஆண்டுகளில் சீரடி சாய்பாபா கோவிலின் வருமானம் ரூ. 1009 கோடியை கடந்துள்ளது. இந்த வருவாயில் 53 சதவீதத்தை மக்கள் நலப்பணிகளுக்கு பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

English summary
A devotee from Delhi offers a garland with 51 gold coins, weighing 521 gms and worth Rs 16.28 lac, to Saibaba Temple in Shirdi on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X