For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உபியில் கலெக்டரை செருப்பால் அடிப்பதாக கூறிய சமாஜ்வாடி தலைவர்..!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பைஸாபாத்: கலெக்டரை செருப்பால் அடிப்பேன் என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

2014 லோக்சபா தேர்தலுக்கு உ.பி. மாநிலம் பைஸாபாத் தொகுதியிலிருந்து சமாஜ்வாடிக் கட்சியிலிருந்து வேட்பாளராக இப்போதே அறிவிக்கப்பட்டிருப்பவர் திலக் ராம் வர்மா.

இவர் வெள்ளிக்கிழமையன்று சர்க்யூட் ஹவுஸுக்குப் போனார். அங்கு தனக்கு ஒரு அறை ஒதுக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அறை கிடைக்கவில்லை. இதையடுத்து கலெக்டர் அவதேஷ் குமார் மிஸ்ராவுக்குப் போன் போட்டார்.

தனக்கு அரசினர் விருந்தினர் இல்லத்தில் அறை ஒதுக்கித் தருமாறு கூறினார். ஆனால் அறை இல்லாததால் தன்னால் ஒதுக்க இயலாது என்று கூறியுள்ளார் மிஸ்ரா. இதனால் கோபமடைந்த வர்மா, நேரில் வந்தால் ஷுவைக் கழற்றி அடிப்பேன் என்று கோபமாகக் கூறினார். மேலும் இடமாற்றம் செய்து விடுவதாகவும் கலெக்டரை மிரட்டினார்.

இதுகுறித்து வர்மா தற்போது அரசுக்கு புகார் அனுப்பியுள்ளார். தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

English summary
Samajwadi Party's candidate from Uttar Pradesh's Faizabad for the 2014 Lok Sabha elections threatened to beat the city magistrate with shoes after he did not to heed his demand for a room allotment. Tilak Ram Varma, SP's candidate from Faizabad, abused Faizabad city magistrate Awadhesh Kumar Mishra after he refused Varma's demand to allot a room to him in the Circuit House on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X