For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மான் வேட்டையாடிய 5 பேருக்கு ரூ. 1,15,000 அபராதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தர்மபுரி: தர்மபுரி வனப்பகுதியில் மான்வேட்டையாடிய 5 பேருக்கு 1லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அரூர் மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம் மேற்பார்வையில், மொரப்பூர் வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர்கள் வேடியப்பன், செல்வராஜ், வெங்கடேசன் ஆகியோர் நேற்று முன்தினம் கீழ் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புதர்கள் நிறைந்த ஒரு நீர் நிலைக்கு அருகில், இரண்டு பேர் மான் கறியை வெட்டி பங்கிட்டு கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் அரூர் அருகில் உள்ள சோலைக்கொட்டாய் சமத்துவபுரத்தை சேர்ந்த கணபதி, வயது-23, மற்றும் அதே பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி, வயது-35, என்பது தெரிந்தது.

இருவரையும் கைது செய்த வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். மான் வேட்டையாடிய இருவருக்கும் தலா, 20 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், இதர் போல, கவுரமலை காப்புக்காட்டில் வனத்துறையின் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மான் கறியை மூன்று பேர் சமைத்து கொண்டிருந்தனர். அவர்கள் இவர்கள் மூவருக்கும் மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம் தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அவர்களிடமிருந்து மான் கறி மற்றும் சமையல் செய்யப்பட்ட குழம்பு ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர்.

English summary
5 persons were fined Rs. 1,15,000 for hunting deer in Dharmapuri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X