For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2012ல் கேரளாவில் ‘பப்ளிக்கா’ தம் அடிச்சு பைன் கட்டினவங்க 77,000 பேராம்....

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சென்ற ஆண்டு கேரளாவில் மட்டும் பொது இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக 77 ஆயிரம் பேர் அபராதம்கட்டியுள்ளார்களாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னர், பொது இடங்களில் புகை பிடிப்போரை பிடித்து அபராதம் விதிக்கும் சட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், இச்சட்டத்தை மாநிலங்கள் வெவ்வேறு நடை முறைகளில் செயல் படுத்தி வருகிறது.

கேரளாவில் சென்ற ஆண்டு சட்டத்தை மீறி, பொது இடங்களில் புகை பிடித்தவர்கள் பற்றிய விவரத்தை அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்,

மக்கள் நலனே முக்கியம்....

மக்கள் நலனே முக்கியம்....

பொது இடங்களில் புகை பிடிப்பதன் மூலம், அருகில் இருக்கும் சம்பந்தமில்லாத அந்நியர்களும் நுரையீரல் பாதிப்பு போன்ற நோய் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாலேயே இச்சட்டம் அமல் படுத்தப்பட்டது.

கேரளாவில்ல் அபராதம்...

கேரளாவில்ல் அபராதம்...

2012ம் ஆண்டு கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்த 77 ஆயிரத்து 288 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளத்தில் அதிகம்...

எர்ணாகுளத்தில் அதிகம்...

குறிப்பாக, எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் சட்டத்தை மதிக்காமல் பொது இடத்தில் புகை பிடித்த குற்றத்திற்காக 26 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ரயில் நிலையத்தில்...

ரயில் நிலையத்தில்...

கேரள மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில், ரயில்கள் மற்றும் ரயில் நிலைய நடைமேடைகளில் புகைபிடித்த குற்றத்திற்காக 226 பேருக்கு ரெயில்வே போலீசார் அபராதம் விதித்துள்ளனராம்.

சட்டத்தை மீறுபவர்கள் அதிகம்...

சட்டத்தை மீறுபவர்கள் அதிகம்...

ஆனால், இதுஹ் 2011ம் ஆண்டைக்காட்டிலும் அதிகம் என அமைச்சர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு 54,980 பேரிடம் மட்டுமே பொது இடங்களில் புகை பிடித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala Police stepping up the vigil against those smoking in public places, 77,288 people were booked under the provisions of an anti-smoking law in 2012, a Kerala minister said here Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X