For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்தீஸ்கரில் அடைமழை: ஒரே நாளில் 4 குழந்தைகள் மின்னலுக்கு பலியான பரிதாபம்...

Google Oneindia Tamil News

ராய்கர்: சத்தீஸ்கரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மின்னல் தாக்கி 4 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்திள் கடந்த சில தினங்களாக மழை கொட்டி வருகிறது. இந்நிலையில், ராய்கர் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நவப்பாரா நடேலி கிராமத்தில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கூடிய அடைமழையால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர்.

மழையின் தாக்கம் சற்றுக் குறைந்ததால், கரன் (7), சங்கீதா (8), பரத்லால் (10) ஆகியோர் வீட்டின் வெளியே விளையாடச் சென்றுள்ளனர். அப்போது, திடீரென மின்னல் அவர்களைத் தாக்கியது.இதில் சம்பவ இடத்திலேயே அந்த நான்கு குழந்தைகளும் பலியாயினர்.

இதேபோன்று,, கிண்டுல் கிராமத்திலும் கவுரிசங்கர் ரதியா (15) என்ற சிறுவன் மின்னல் தாக்கி இறந்தான். ஒரே நாளில் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கர் மாவட்டத்தில் 4 குழந்தைகள் மின்னல் தாக்கி பலியானதால், அப்பகுதி மக்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

English summary
Four children, including three of a family, were killed and one other was hurt after being hit by lightning during thundershowers at separate places in Raigarh district, police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X