For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானா தாமதம்... ப.சிதம்பரம், சுஷில் குமார் ஷிண்டே மீது ”இ.பி.கோ 420” கீழ் கேஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

Shinde, Chidambaram booked in Andhra for 'cheating' over formation of Telangana state
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என உறுதி கூறி பொதுமக்களை ஏமாற்றியதாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நிதி அமைசர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது ஐபிசி 420ஆவது பிரிவின் கீழ் ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் தற்போதைய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவும் மாறி மாறி உறுதிமொழி கொடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் அளித்த உறுதிமொழியின்படி இதுவரை தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து தெலுங்கானா இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டு அமைச்சர்கள் மீதும் மோசடிப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றமும் இரண்டு அமைச்சர்கள் மீதும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. இரு அமைச்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய மீண்டும் உத்தரவிட்டதால் இருவர் மீதும் ஹைதராபாத் புறநகர் பகுதியான எல்.பி. நகர் காவல்நிலையில் மோசடி மற்றும் ஏமாற்றுதல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

English summary
Andhra Pradesh police have booked Union home minister SushilkumarShinde and Union finance minister P Chidambaram for allegedly cheating people of Telangana by going back on their word over formation of separate Telangana state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X