For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யு.எஸ். கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் ஸ்னோடென்.. ஈக்குவடாரில் தஞ்சம் கோருகிறார்!

By Mathi
Google Oneindia Tamil News

Edward Snowden
மாஸ்கோ: உலக நாடுகளின் இணையதளங்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு எப்படியெல்லாம் உளவு பார்க்கிறது என்பதை அம்பலப்படுத்தியவர் அமெரிக்காவின் உளவு அமைப்பின் முன்னாள் பணியாளர் ஸ்னோடென்..இதனாலேயே அவரை வேட்டையாட புறப்பட்டிருக்கிறது அமெரிக்கா.

ஸ்னோடென் மீது அரசு ஆவண தகவல்களை திருடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு அமெரிக்கா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் இருந்தார் ஸ்னோடென். அதன் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறி ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றார்.

இருப்பினும் மாஸ்கோவில் தொடர்ந்தும் தங்காமல் ஐஸ்லாந்து அல்லது ஈக்குவடாரில் அவர் தஞ்சம் கோருவார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே, இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஈக்குவடாரில் தூதரகத்தில் கடந்த ஓராண்டாக தஞ்சம் அடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றில் அமெரிக்காவின் உளவு நடவடிக்கை தொடர்பாக மேலும் சில தகவல்களை ஸ்னோடென் வெளிட்டுள்ளார். சீனாவின் ஸிங்குவா பல்கலைக்கழகத்தை அமெரிக்கா உளவு பார்ப்பதுடன் அதன் கணினிகளை செயலிழக்கச் செய்கிறது என்றும் ஸ்னோடென் கூறியுள்ளார்.

English summary
The intelligence whistleblower Edward Snowden will on Monday attempt to complete an audacious escape to the relative safety of South America after his departure from Hong Kong aggravated already fraught diplomatic relations between the United States and China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X