For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளி, சனி தான் இனி வார இறுதி நாட்கள்...: ஓமனைத் தொடர்ந்து சவூதியிலும் அதிரடி

Google Oneindia Tamil News

Day
ரியாத்: வியாழன், வெள்ளியாக இருந்த வார இறுதி நாட்களை மாற்றி, வெள்ளி, சனியை வார இறுதி நாட்களாக சவூதி அரசு அறிவித்துள்ளது.

பொதுவாக உலகில் உள்ள பெரும்பான்மையான நாடுகளில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களே வார இறுதி நாட்களாக கணக்கில் கொள்ளப்பட்டு விடுமுறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், அரபு நாடுகள் மட்டும் இதற்கு விதி விலக்கானவை.

நீண்ட காலமாகவே அரபு நாடுகளில் மட்டும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமை தான் வார இறுதி நாட்களாக கடை பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் ஓமன் அரசு வெள்ளி மற்றும் சனிக்கிழமையை வார இறுதி விடுமுறை தினமாக அறிவித்தது.

தற்போது, அதன் தொடர்ச்சியாக சவூதியிலும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையையே இனி வார இறுதி தினங்களாக கணக்கில் கொள்ளப் போவதாக சவூதி அரசு அறிவித்துள்ளது. ஞாயிறு முதல் வியாழன் வரையிலான 5 நாட்கள் வார வேலை நாட்களாக கணக்கில் கொள்ளப்படும்.

சவூதி மன்னர் அப்துல்லாவின் ஒப்புதலின் பேரில் இந்த புதிய முறை அமுல் படுத்தப்பட இருக்கிறது. இவ்வாறு வார வேலை நாட்களை மாற்றி அமைத்ததன் மூலம், வளைகுடாவில் உள்ள இதர நாடுகளுடன் வேலை நாட்களில் எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ள முடியுமாம்.

English summary
Saudi Arabia, the Arab world's biggest economy, shifted the official weekend to Friday and Saturday to align the kingdom's economy with regional markets, Saudi Press Agency said citing a royal decree.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X