For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழீழ மாணவர் எழுச்சி நாள்: இனப்படுகொலையை தடுக்கக் கோரி லண்டனில் பேரணி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசால் நடத்தப்பட்டு வரும் இனப் படுகொலையை தடுக்கக் கோரி லண்டனில் மாணவர்கள ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஒருங்கிணைப்பில் ஜூன் 23 ஆம் தேதி ஞாயிறன்று அன்று பொன் சிவகுமாரன் 39 ஆவது நினைவு நாளையொட்டி இங்கிலாந்து பிரதமரின் இல்லத்திற்கு வெளியில் நிகழ்வஞ்சலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் முழக்கம்

மாணவர்கள் முழக்கம்

ஈழ மக்கள் இனப்படுகொலை பற்றிய சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற பதாதைகளை ஏந்தியிருந்த மாணவர்கள், தமிழர் வாழ் இடங்களில் இடம்பெறும் சிங்கள குடியிருப்பு பற்றியும் தமிழர் நில அபகரிப்புப் பற்றியும் முழக்கமிட்டனர்.

சார்க் மாநாட்டை புறக்கணிக்க

சார்க் மாநாட்டை புறக்கணிக்க

பிரித்தானிய பிரதமர் மற்றும் பிரித்தானிய இளவரசர் அவர்களும் இலங்கையில் நடக்கவிருக்கும் மாநாட்டை புறக்கணிக்குமாறும் வலியுறுத்தினார் . பிரித்தானியாவிலுள்ள 10 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களிலும் இருந்து மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

நடனத்துடன் போராட்டம்

நடனத்துடன் போராட்டம்

பிரசித்தி பெற்ற சுற்றுலா பயணிகள் கூடுதலாக காணப்படும் இடமான Piccadly Circus இல் மாணவர்கள் பலர் சேர்ந்து மேற்கத்தைய நடனத்துடன் சார்ந்த பாணியில் திடிரென்று வேற்றினமக்கள் முன்னால் தோன்றி நடனமொன்றை இடம்பெற செய்து அதன்மூலமாக ஈழப்பிரச்சனையை பற்றிய விழிப்புணர்வை பரப்பினர்.

ஈழம் பற்றி துண்டு பிரசுரம்

ஈழம் பற்றி துண்டு பிரசுரம்

அவர்களின் நடன நிகழ்வை ஒட்டி மற்றும் சில மாணவர்கள் சுற்றியுள்ள சுற்றுலா பயணிகளிற்கும் மற்றும் வேற்று இன மக்களிற்க்கும் ஈழப் பிரச்சனையைப் பற்றிய துண்டு பிரசுரங்களை அளித்தனர்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆர்பாட்டத்தின் போது தமிழ் இளையோர் அமைப்பால் முன்வைக்கப் பட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை அடங்கிய மனுவும், சிறுவர்களின் கைப்பட உருவாகிய மனுக்களும் பிரதமர் மாளிகையில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற வீர வசனத்துடன் ஆர்பாட்டம் நிறைவு பெற்றது.

English summary
Lots of Tamils held a rally against Lankan genocidce in London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X