For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாரும் சாம்பார் வையுங்க, மீன் விலையும் கூடிப்போச்சு...

Google Oneindia Tamil News

சென்னை: சமீப காலமாக உயர்ந்து காணப்பட்ட சாம்பார் வெங்காயத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வார காலமாக மீன் வரத்து குறைந்திருப்பதினால், சென்னையில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் தற்போது 45 நாள் மீன்பிடி தடைக் காலம். அதன் எதிரொலியாக, காசிமேடு உள்ளிட்ட இடங்களில் பிடிக்கப்படும் மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன. இதனால், சென்னைக்கு விற்பனை மீன்வரத்து குறைந்துள்ளது.

Fish curry

சமீபத்தில் தான் சிக்கன் மற்றும் மட்டன் விலை கணிசமாக உயர்ந்தது. தற்போது மீன் விலையும் உயர்ந்துள்ளதால் அசைவப் பிரியர்களின் நிலை தான் ‘அந்தோ...' பரிதாபமாக உள்ளது.

ஆனால், ஒரு ஆறுதலான விஷயமாக வரலாறு காணாத அளவில் ஒரு கிலோ ரூ 120 வரை விற்கப்பட்ட சாம்பார் வெங்காயத்தின் விலை அதிரடியாக் ரூ 65க்கு குறைந்துள்ளது. தமிழக அரசு மலிவு விலை காய்கறிகடைகளைத் தொடங்கியதன் விளைவாக, சின்ன வெங்காயம் பதுக்கல் குறைந்துள்ளதே இந்த அதிரடி விலை வீழ்ச்சிக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

English summary
Nethili is priced at Rs 300 for a kilo, while sura or shark costs Rs 550-Rs 600. Prawns costs Rs 600 and vanjaram fish is sold between Rs 600 and Rs 700 in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X