For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலை; தீவிர ஆய்வில் நிறுவனங்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே வங்கக் கடலுக்கு அடியில் எரிமலை இருக்கிறதா என்பது குறித்து 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Is there a volcano about 100 to 110 km from Chennai?

சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியது.. இதனால் கடல் நீரின் நிறம் மாறியது என்று ஒரு மாலுமி தமது பயணக் குறிப்பில் பதிவு செய்திருந்தார். மேலும் சில விஞ்ஞானிகளும் இணையதள பக்கங்களில் இதைப் பதிவு செய்திருப்பதுடன் வங்கக் கடலின் அடியில் பெயரிடப்படாத 0305=01 என்ற எண்ணால் குறிப்பிடப்படுகிற எரிமலை இருக்கிறது என்றும் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் விவரம் கேட்டிருந்தனர். ஆனால் இதை அணுசக்தி ஆணையம், எரிமலை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகியவை வங்கக் கடலில் எரிமலை இருக்கிறதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.

சென்னையில் இருந்து 100 முதல் 110 கிலோ மீட்டருக்குள்தான் கல்பாக்கம் அணுமின் நிலையமும் அமைந்திருக்கிறது. ஒருவேளை கடலுக்கடியில் எரிமலை இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது சென்னை முதல் புதுச்சேரி வரையில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

English summary
Is there a volcano about 100 to 110 kilometre from Chennai? Interestingly, the committee, that consists of eminent scientists from Indira Gandhi Centre for Atomic Research, Atomic Energy Regulatory Board and Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited, has assigned the job to National Geophysical Research Institute and Kumar maintains as of now there is no possibility or there are any records of volcano in the region.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X