For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிச்சுட்டு, குற்றாலத்துல குளிக்கறதே ஒரு தனி சுகமாம்... களைகட்டும் மது விற்பனை

Google Oneindia Tamil News

தென்காசி: குற்றாலத்தில் சீசன் தொடங்குவதற்கு முன்பே, மது விற்பனை களைக் கட்டத் தொடங்கிவிட்டதாம். இதுவரை இரண்டரைக் கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளதாம்.

அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளிக்க சுற்றுலாப் பயணிகளில் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். சீசன் தொடங்கினால் ஆயில் மசாஜ், பழ விற்பனை எவ்வாறு சூடு பிடிக்குமோ, அதுபோல சரக்கு விற்பனையும் தூள் பறக்கும்.

பல இளைஞர்கள் சரக்கை ஏற்றிக் கொண்டு வந்து தான் தங்கள் ஆனந்தக் குளியலையே அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்.

குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குது...

குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குது...

சீசன் காலத்தில் ஆங்காங்கே ஆயில் மசாஜ், பல சரக்குக் கடை என்று புதிது புதிதாக முளைத்து வருமானம் பார்ப்பார்கள் வியாபாரிகள். ஆனால், விளம்பரமே இல்லாமல் எல்லா காலங்களிலும் சரக்கு விற்பனை கல்லா கட்டுகிறதாம் குற்றாலத்தில்.

அதிகரிக்கும் டாஸ்மாக்குகள்...

அதிகரிக்கும் டாஸ்மாக்குகள்...

சீசனுக்கு முன்பு குற்றாலத்தில் மெயின் அருவிக்கு அருகே மட்டும் 2 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்த கடைகளில் ஒரு நாள் விற்பனை ரூ.50 ஆயிரத்தை தாண்டாது. ஆனால், தற்போது சீசனை முன்னிட்டு மேலும் 2 கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம்.

இடம் கிடைக்க மாட்டேங்குதுப்பா...

இடம் கிடைக்க மாட்டேங்குதுப்பா...

குற்றாலம், தென்காசி சாலையில் கூடுதலாக ஒரு கடை திறக்கப்பட்டுள்ளது. மற்றொரு கடை திறக்க இடம் கிடைக்காத காரணத்தால் அந்த கடையை பழைய குற்றாலத்துக்கு மாற்றப்பட்டது.

வெளுத்து வாங்கும் விற்பனை...

வெளுத்து வாங்கும் விற்பனை...

தற்போது, மெயின் அருவி அருகே அமைந்துள்ள மூன்று டாஸ்மாக் கடைகளிலும் நாள் ஒன்றுக்கு விற்பனை கிட்டத்தட்ட ரூ.10 லட்சத்தை தாண்டுகிறதாம். கடைகள் ஒவ்வொன்ரும் தனித்தனியாக நாளொன்றுக்கு ரூ3 லட்சத்தை தாண்டி சரக்கு விற்பனை செய்து வருகிறதாம்.

தள்ளு... முள்ளு...

தள்ளு... முள்ளு...

கடந்த 25 நாட்களில் மட்டும் விற்பனை ரூ.2.50 கோடியை தாண்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அருவியை போன்று டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதுவதால் குற்றாலத்தில் மதுபான கடைகளிலும் தள்ளு முள்ளு தான்.

எல்லாமே புது சரக்கு தான்...

எல்லாமே புது சரக்கு தான்...

நெல்லை மாவட்ட மதுபான கடைகளுக்கு சரியாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே சரக்குகள் அனுப்பப்படுவது வழக்கம்.ஆனால், வியாபாரம் சூடுபிடித்துள்ள குற்றாலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தினமும் சரக்குகள் புதிதாக வந்து இறங்குகின்றனவாம்.

இப்பவே, கண்ணக் கட்டுதே...

இப்பவே, கண்ணக் கட்டுதே...

இப்பவே, இப்படினா... இன்னும் சீசன் களை கட்டினா...சரக்கு சூப்பரா கல்லா கட்டி வசூலில் சாதனை படைக்கும் போல தெரிகிறதே...

English summary
As the season started in Kutralam, large no of tourists are coming there. So the liquor sales has increased in Kutralam area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X