For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இண்டர்நெட்ட ஆன் பண்ணுப்பா... இன்னைக்கு என்ன நியூஸ்னு பாக்கணும்

Google Oneindia Tamil News

லண்டன்: இண்டர் நெட்டைப் பயன் படுத்தி செய்திகள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

மொபைலில் இண்டர்நெட் வந்த பிறகு, உலகமே கைக்குள் சுருங்கிப் போன நிலைமை தான். காலை எழுந்தவுடன் படிப்பு என்ற நிலை எல்லாம் மாறி, அவ்வப்போது அப்டேட்களை அள்ளி வீசுகிறது இண்டர்நெட்.

அதிலும், ஆன்லைனில் செய்திகள் படிப்பதற்காக மக்கள் அதிகளவு பணம் செலவு செய்கிறார்களாம். இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

10 மாதம்... 9 நாடுகள்...

10 மாதம்... 9 நாடுகள்...

கடந்த 10 மாதங்களில் 9 நாடுகளைச் சேர்ந்த 1000 இன்டர்நெட் பயன்பாட்டாளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வருமானத்தில் கொஞ்சம்...

வருமானத்தில் கொஞ்சம்...

இதில், சராசரியாக ஆண்டு வருமானம் 25000 முதல் 50,000 பவுண்டுகளைக் கொண்ட 25 முதல் 34 வயதுடையவர்கள், தங்களின் வருமானத்தில் 5 முதல் 14‌ சதவீதம் தொகையை ஆன்லைன் மூலம் செய்திகளை படிப்பதற்காக செலவிடுகின்றனர் என தெரிய வந்துள்ளதாம்.

லண்டனிலும்...

லண்டனிலும்...

ஏற்கனவே லண்டனில், ஆன்லைனில் செய்தி படிப்பதற்காக 23 சதவீதம் பேர் அதிகளவில் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
More people are now willing to pay for online news or expecting to pay for it in future, a large-scale Oxford University report has found. Over the last 10 months, there has been a significant shift in public attitudes towards online news, a survey of 11,000 internet users across nine countries has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X