For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரலைவிட்டு ஆட்டும் ஸ்னோடென் விவகாரம்.. யு.எஸ். கோரிக்கையை நிராகரித்தது ரஷியா

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: உலக நாடுகளின் இணையதளங்கள், சமூக வலைதளங்களை அமெரிக்கா கண்காணித்து வருவதை அம்பலப்படுத்திய ஸ்னோடெனை ரஷியா நாடு கடத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்காவை அதிர வைத்திருக்கும் பெயர் ஸ்னோடென்...அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு பிரிசம் என்ற பெயரில் அனைத்து இணையதளம் மற்றும் சதுக வலைதளங்களில் செயல்படுவோரை முழுமையாக கண்காணித்து வருகிறது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டவர் ஸ்னோடென்.. இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளில் அடைக்கலம் கோரி மர்மமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் ஸ்னோடென்..

Edward Snowden

சீனாவின் ஹாங்ஹாங்கில் இருந்த அவர் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தததாகவும் அங்கிருந்து ஈக்குவடார் நாட்டில் அவர் அடைக்கலம் கோரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ரஷியாவுக்குள் ஸ்னோடென் நுழைந்தால் அவரைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. அப்படி ஒப்படைக்காவிட்டால் கடும் ன்விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்தது.

இந்நிலையில் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ், ஸ்னோடென் அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்ததுடன், அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து கடும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ஸ்னோடென்னுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமே இல்லாத நிலையில் நாங்கள் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பினார்.

ஆனால் மாஸ்கோவில் இருந்து கியூபா தலைநகர் ஹவானா செல்லும் விமானத்தில் ஸ்னோடென் முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும் செர்ஜி லவ்ரோவ், ஸ்னோடென் பற்றிய எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அவர் தற்போது தென் அமெரிக்கா நாடுகளில் அடைக்கல கோரியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

English summary
Russia’s foreign minister has rejected U.S. demands to extradite National Security Agency leaker Edward Snowden, who has apparently stopped in Moscow while trying to evade U.S. justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X