For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்பாக்கம் பகுதி கடலில் எரிமலைகள் இல்லை: அணுமின் சக்தி கழகம் சொல்கிறது!

By Mathi
Google Oneindia Tamil News

'No active volcano' near Kalpakkam nuke complex, says NPCIL
டெல்லி: சென்னையை அடுத்த கல்பாக்கம் அணுமின் நிலையப் பகுதியில் எரிமலைகள் எதுவும் கிடையாது என்று இந்தி்ய அணுமின் சக்தி கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த கல்பாக்க அணு மின்நிலைய வளாகத்தில் இருந்து சுமார் 100 முதல் 110 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் எரிமலை இருப்பதாக எரிமலைகள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வரும் ஸ்மித்சோனியன் என்ற நிறுவனம் தமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் என்பவர் எரிமலை பற்றி அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், இந்திய அணுசக்தி கழகத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் விவரம் கோரியிருந்தனர்.

இதற்கு பதிலாக சென்னை கல்பாக்கம் அருகே வங்கக் கடலில் எரிமலைகள் இருப்பது பற்றி 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து வருவதாக அணுசக்தி கழகம் கூறியதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்திய அணுசக்தி கழகம், கடந்த 13-ந் தேதி வழக்கறிஞர் வெற்றிச் செல்வனுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில், ஸ்மித்சோனியன் அமைப்பு, கல்பாக்கம் பகுதியில் எரிமலை இருப்பதாக தெரிவித்து இருப்பது உறுதியற்றது, ஆதாரம் இல்லாதது. அந்த நிறுவனம் தெரிவித்த தகவல் குறித்து தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் நிபுணர்களுடன் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆய்வும் நடத்தப்பட்டது. அதன் முடிவில் அந்தப் பகுதியில், எரிமலையே கிடையாது. அந்தப் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அதனால் கவலைப்பட வேண்டியது இல்லை என்றும் அந்த நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர் எனக் கூறப்பட்டிருக்கிறது..

எரிமலை எப்படி பொறுக்கும்?

English summary
Nuclear Power Corporation of India Limited (NPCIL) has endorsed the opinion of scientists attached to various national agencies that there was "no active volcano" near Kalpakkam nuclear complex near here, as stated by Smithsonian Global Volcanism programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X