For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி விடுதலை... தேர்தலில் போட்டியிடுவாரா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Lankan Army releases LTTE political wing leader Tamilini
கொழும்பு: விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபைக்கான தேர்தலில் அரசாங்க வேட்பாளராக தமிழினி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் நடந்த இறுதி கட்ட போருக்கு பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி, ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். தமிழினி அவருடைய தாயார் சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தர்சன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் அரசாங்க கட்சியின் வேட்பாளராகத் தமிழினி போட்டியிட உள்ளர் என்றும் அதற்கு முன்னதாக அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழினி, வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து தமிழினி எதையும் தெரிவிக்கவில்லை.

வரும் செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழினி இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan army has released Tamilini former leader of LTTE political wing. She was arrested after the end of civil war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X