For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் கழிவறையைப் பயன்படுத்த போராடி உரிமை பெற்ற 6 வயது 'திருநங்கை' சிறுமி

Google Oneindia Tamil News

TRANSGENDER GIRL, 6, WINS RIGHT TO USE FEMALE TOILETS
வாஷிங்டன்: அமெரிக்காவில், ஆறு வயது திருநங்கைச் சிறுமிக்கு பள்ளியில் பெண்கள் கழிவறையைப் பயன் படுத்த அனுமதி வழங்கியுள்ளது பள்ளி நிர்வாகம்.

காய் மேதிஸ் எனப்படும் ஆறு வய்து சிறுமி கொலரோடாவில் உள்ள பவுண்டன் நகரில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பாலின சிக்கலால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி பிறந்தது என்னவோ ஆண் குழந்தையாகத்தான். ஆனால், அவர் தற்போது பெண் குழந்தையாக மாறி தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறாள்.

பவுண்டனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் மேதிஸ்க்கு பிரச்சினை பாத்ரூம் வடிவில் வந்தது. பெண்கள் கழிவறையைப் மேதிஸ் பயன்படுத்த தடை விதித்தது பள்ளி நிர்வாகம்.

இதனைக் கேட்டு ஆவேசமடைந்த மேதிஸின் பெற்றோர்கள் இது குறித்து பள்ளியில் முறையிட்டுப் பார்த்தனர். ஆனால் அவர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், பிரச்சனையை திருநங்கைகள் பாதுகாப்பு அமைப்பு கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

பிரச்சனையை ஆராய்ந்த திருநங்கைகள் பாதுகாப்பு அமைப்பு, மேதிஸ் பெண்கள் கழிவறையைப் பயன்படுத்த உத்தரவிட்டு பள்ளிக்கு ஆணை அனுப்பியுள்ளது. கேத்யூவை பெண் போன்றே வளர்ப்பதன் மூலமாக அவளது மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என நம்புகின்றனர் அவளது பெற்றோர்கள்.

முப்பதாயிரத்தில் ஒருவருக்கு இது போன்ற பாலினச் சிக்கல் பிறவியிலேயே உண்டாவதாக மருத்துவத்துறை கூறுகிறது.

English summary
A SIX-year-old transgender girl has won the right to use female toilets at her school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X