For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகண்டிற்கு ரூ.100 கோடி நிதி: அமைச்சர் சிரஞ்சீவி அறிவிப்பு

By Siva
Google Oneindia Tamil News

Union minister Chiranjeevi announces Rs 100 cr for Uttarakhand
டெல்லி: வெள்ளத்தால் சீர்குலைந்த உத்தரகண்ட் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய சுற்றுலாத் துறை சார்பில் ரூ.100 கோடி நிதி அளிக்கப்படும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் உத்தரகண்ட் மாநிலம் நிலை குலைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள புன்னிய ஸ்தலங்கள், சுற்றுலாத் தலங்கள் வெள்ளத்தில் பெரும் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு கூறுமாறு மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. சேத மதிப்பை பார்த்துவிட்டு நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தின் உள்கட்டமைப்பை சரிசெய்ய மத்திய சுற்றுலாத் துறை சார்பில் ரூ.100 கோடி நிதி அளிக்கப்படும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடியை உத்தரகண்டிற்கு அளித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுலாத் துறையை சீர் செய்ய பிரதமர் நிவாரண நிதிக்கு வரும் நன்கொடைகளை சிரஞ்சீவி கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Tourism Minister K Chiranjeevi announced that flood-ravaged Uttarakhand will receive a special Central financial package of Rs 100 crore for restoration and reconstruction of the affected Government tourist facilities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X