For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டேலா கவலைக்கிடம்: மொசாம்பிக் பயணத்தை ரத்து செய்த தென்னாப்பிரிக்க அதிபர் ஜுமா

By Siva
Google Oneindia Tamil News

Zuma
ப்ரிடோரியா: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா தனது மொசாம்பிக் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(94) இந்த மாத துவக்கத்தில் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அவ்வப்போது உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் வீடு திரும்புவதுமாக இருந்தார். ஆனால் இம்முறை அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

அவரது இறுதி அமைதியாக இருக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்துள்ளார். அவரை நேற்று அவரது மகள் ஜின்ட்சி பார்த்துள்ளார். அப்போது தனது தந்தை கண்ணைத் திறந்ததாகவும், தன்னைப் பார்த்து சிரித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மண்டேலாவை தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவும் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

மண்டேலாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் ஜுமா தனது மொசாம்பிக் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

English summary
South African President Jacob Zuma cancelled a scheduled trip to Mozambique after visiting former leader Nelson Mandela, who remains critically ill in a hospital, BBC reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X