For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.592 குறைந்தது: மக்கள் மகிழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.592 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை சரிவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி, அமெரிக்க ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு ஆகியவற்றால் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது.

கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்தது. நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.19,656க்கு விற்கப்பட்டது. கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,448 குறைந்தது. இந்நிலையில் நேற்று தங்க விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்தது. நேற்று மாலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,470க்கும், ஒரு சவரன் ரூ.19, 760க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ரூ.592 குறைவு

இன்று ரூ.592 குறைவு

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 74 ரூபாயும், சவரனுக்கு 592 ரூபாயும் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2,396க்கும், சவரன் ரூ.19,168க்கும் விற்கப்படுகிறது.

ஏழைகள் மகிழ்ச்சி

ஏழைகள் மகிழ்ச்சி

கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்தது. ஏப்ரல் 18ம் தேதி அன்று ஒரு கிராம் ரூ. 2,401 வரை சரிந்தது. இன்றைய விலை ஏப்ரல் மாத விலையை விட குறைவாக உள்ளது. தங்கத்தின் விலை இவ்வளவு சரிந்ததில் ஏழை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளியின் விலையும் சரிவு

வெள்ளியின் விலையும் சரிவு

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.675 குறைந்துள்ளது. இன்று காலை ஒரு கிராம் வெள்ளி ரூ.42.10க்கும், ஒரு கிலோ ரூ.39,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

English summary
Gold price has decreased by Rs. 592 for a sovereign on friday. This price fall has made the poor happy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X