For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை, கால், தலை...: நர மாமிச பேக்கரி: இதப் பாத்தா... நீங்க ‘பன்’ சாப்பிடுறதயே விட்ருவீங்க....!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பேங்காக்: வாய்க்கு ருசியாக சாப்பிட்ட காலங்கள் மாறி, உணவு கண்ணுக்கும் அழகாக தெரிய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு கூடி விட்டது.

காலத்திற்கேற்ப மக்களின் ரசனைகளும் மாறி வரும் வேளையில், தற்போது தாய்லாந்தில் சூடு பிடித்துள்ளது புத்ஹிய வகை பன்கள் விற்பனை.

பார்ப்ப்தற்கு மனிதனின் அங்கங்கள் போன்று தோற்றமளிக்கும் இந்த பன்களை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்களாம்.

மனித வேட்டை....

மனித வேட்டை....

படத்தைப்பார்த்து ஏதோ மனித வேட்டையென்று எண்ணிவிடாதீர்கள். இவையனைத்தும் உண்ணக்கூடிய பன் அல்லது கேக் என்றால் உங்களால் நம்பமுடியவில்லையா?

வினோத பன்கள்...

வினோத பன்கள்...

தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக தாய்லாந்தைச்சேர்ந்த பேக்கரி உரிமையாளர் ஒருவர் இவ்வாறான வினோத அமைப்புடைய பன்களை செய்து விற்று வருகிறார்.

தொங்கும் உறுப்புகள்...

தொங்கும் உறுப்புகள்...

நம்மூர் கோழி, ஆடு இறைச்சிக்கடைகளில் தொங்க விட்டிருப்பார்களே, அதுபோல இந்த பிரட்களைத் தொங்க விட்டுள்ளார் அக்கடையின் உரிமையாளரான கிட்டிவாட்.

மாமிச பேக்கரி...

மாமிச பேக்கரி...

தலை, கை, கால் என உடலின் அனைத்து உறுப்புகளையும் மாதிரி இவர் பன்களைச் செய்து விற்பனை செய்கிறார். முழு உடம்பாக வேண்டும் எனக் கேட்டாலும் செய்து தருகிறார்களாம்.

வித்தியாசம் காட்ட முனைந்து...

வித்தியாசம் காட்ட முனைந்து...

அப்பாவின் வியாபாரத்தில் வித்தியாசத்தை புகுத்த நினைத்த கிட்டிவாட்டுக்கு உதித்தது தான் இந்த விபரீத ஐடியாவாம். கிட்டிவாட் ஒரு கலைத்துறாஇ மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கும் போதே வயிறு கலக்கும்...

பார்க்கும் போதே வயிறு கலக்கும்...

அதிலும், இவரது படைப்புகள் சாராரணமானவை அல்ல. மிகவும் கொடூரமாக உடல் பாகங்களை செய்து பார்ப்பவர்களுக்கு திகில் ஊட்டுகிறார் கிட்டிவாட்.

என்ன ரசனைப்பா...

என்ன ரசனைப்பா...

கடல் கடந்தும் இவருக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம். இரத்தம் உறையாமல் இருப்பதைப் போன்ற பன்களைத் தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனராம்.

சாப்பாட்டு ரசனை மாறும் அபாயம்...

சாப்பாட்டு ரசனை மாறும் அபாயம்...

விற்பனையில் சக்கைப் போடு போடும் இந்த மனித உடல் பன்களுக்கு சில தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர் ஒருவர், ‘ இதுபோன்ற பொருட்கள் மூலம் மனிதர்களது சாப்பாட்டு ரசனை வேறு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறது.

இது ரொம்ப ஆபத்துங்க...

இது ரொம்ப ஆபத்துங்க...

இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் நர மாமிசம் உண்ணும் நிலைக்கு தள்ளப்படலாம்.. விளையாட்டாக ஆரம்பிக்கும் இது போன்ற செயல்கள் விபரீதத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்ற ரசனைகளை ஊக்குவிப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாதாரண பன்...

சாதாரண பன்...

என்னமோ இதைப்பார்த்துவிட்டு நீங்கள் சாதாரண பன் சாப்பிடுவதை கூட நிறுத்திவிடாதீர்கள்.

English summary
Body Bakery: Bread imitating Gore by Kittiwat Unarrom. This is bread but this is also art as Thailand Fine Art student and artist Kittiwat Unarrom is the son of a classic baker. "Body Bakery" is the result of Thai art influence on bakery and these realistic looking sculptures of dismembered human body parts sculpted entirely from bread really are amazing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X