For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்னாப்பிரிக்கா முழுவதும் மண்டேலா புகழ்பாடும் ஒபாமா

By Siva
Google Oneindia Tamil News

Unable to visit Nelson Mandela, Barack Obama honors legacy
ஜொஹன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் மருத்துவமனையில் இருக்கும் மண்டேலாவை சந்திக்க முடியாமல் போனாலும் அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நுரையீரல் கோளாறு காரணமாக ப்ரிடோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவை அவர் சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒபாமா மண்டேலாவை தொந்தரவு செய்ய விரும்பாததால் மருத்துவமனைக்கு செல்லவில்லை.

மாறாக அவர் மண்டேலாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். மண்டேலா சரித்திர புகழ் வாய்ந்த மனிதர்களில் ஒருவர் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒபாமா தனது ஹீரோவான மண்டேலாவை சந்திக்கத் தான் தென்னாப்பிரிக்க பயணத்திற்கு திட்டமிட்டார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இருப்பினும் தான் செல்லும் இடங்களில் எல்லாம் அவர் மண்டேலாவின் பெருமையைத் தான் பேசிக் கொண்டிருக்கிறார்.

ராபன் தீவில் மண்டேலா இருந்த சிறையை இன்று ஒபாமா பார்வையிடுகிறார்.

English summary
US president Barack Obama who didn't want to disturb the ailing Mandela at the Pretoria hospital visited his family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X