For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் அன்லிமிடெட் ரோமிங்: ஆனால் ஒரு தொகையை செலுத்த வேண்டும்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இன்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி அன்லிமிடெட் ரோமிங் கால்கள் பண்ணலாம் என்று தொலைத்தொடர்புத் துறை ஆணையம் அறிவித்துள்ளது.

கட்டணமில்லா ரோமிங் திட்டம் வரும் அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். ஆனால் அது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று தொலைத் தொடர்புத் துறை ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு இரு வகை ரோமிங் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த திட்டத்தை தேர்வு செய்யலாம்.

2 திட்டங்கள் என்னென்ன?

2 திட்டங்கள் என்னென்ன?

அதன்படி ஒன்று குறிப்பிட்ட தொகையை கட்டிவிட்டு அன்லிமிடெட் ரோமிங் கால் பண்ணலாம். இரண்டு, இலவச ரோமிங்கும் கிடையாது, குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டியதும் இல்லை. வாடிக்கையாளர்கள் இதில் தங்களுக்கு பிடித்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

இன்று முதல் அமல்

இன்று முதல் அமல்

குறிப்பிட்டத் தொகையை செலுத்தி ரோமிங் கால் பண்ணும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உதாரணமாக ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தினமும் ரூ.5 கட்டணம் செலுத்தி அன்லிமிடெட் ரோமிங் கால்கள் பண்ணிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

பிற ரோமிங் கட்டணம் 57 சதவீதம் வரை குறைப்பு

பிற ரோமிங் கட்டணம் 57 சதவீதம் வரை குறைப்பு

2007ல் தொலைத்தொடர்புத் துறை ரோமிங் கட்டணத்தை நிர்ணயித்தது. அப்போது உள்ளூர் கால்கள் செய்தால் ஒரு நிமிடத்திற்கு அதிகபட்சமாக ரூ.1.40ம் அதுவே அவுட்கோயிங் எஸ்டிடியாக இருந்தால் நிமிடத்திற்கு ரூ. 2.40ம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் அவுட்கோயிங் உள்ளூர் கால்களுக்கான அதிகபட்ச கட்டணம் தற்போது ரூ.1 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று அவுட்கோயிங் எஸ்டிடி கால்களுக்கான கட்டணம் ரூ.1.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய ரோமிங்கில் இன்கமிங் கால்களுக்கான ஒரு நிமிட கட்டணம் ரூ.1.75ல் இருந்து 75 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது.

English summary
Telecom regulator TRAI will allow free mobile roaming on payment of a fixed fee from today and will also reduce national roaming charges for others by up to 57 percent. TRAI, however, said making national roaming completely free of charges is not practical as of now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X