For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரோ வரலாற்றில் முதல் முறையாக.. இன்று நள்ளிரவில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி22!

Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் வரலாற்றிலேயே முதல் முறையாக இரவில் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறவுள்ளது.

பிஎஸ்எல்வி சி 22 ராக்கெட் மூலம், ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இஸ்ரோவின் வரலாற்றில் இரவில், அதுவும் கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் இந்திய விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

சதம் கண்ட இஸ்ரோ

சதம் கண்ட இஸ்ரோ

இதுவரை 100க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதலை கடந்த 50 ஆண்டுகளில் கண்டுள்ளது இஸ்ரோ.

முதல் முறையாக நள்ளிரவில்

முதல் முறையாக நள்ளிரவில்

இந்த நிலையில் முதல் முறையாக இன்று நள்ளிரவு வாக்கில் பிஎஸ்எல்வி சி22 ராக்கெட்டை அது ஏவுகிறது.

ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ

ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ

வாகனப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக இந்தியா உருவாக்கியுள்ள பிரத்யேக நேவிகேஷனல் செயற்கைக் கோள்தான் ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ எனப்படும் இந்திய பிராந்திய நேவிகேஷனல் செயற்கைக் கோள் ஆகும்.

மொத்தம் 7

மொத்தம் 7

மொத்தம் 7 செயற்கைக் கோள்களை 2014ம் ஆண்டுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் செயற்கைக்கோள்தான் இன்று செலுத்தப்படவுள்ளது.

சரியாக 11.40 மணிக்கு

சரியாக 11.40 மணிக்கு

இன்று இரவு 11.40 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக் கோளை சுமந்தபடி பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாயும்.

காலையில், பகலில் ஏன் மாலையில் கூட

காலையில், பகலில் ஏன் மாலையில் கூட

இதற்கு முன்பு காலையிலும், பகலிலும், மாலையிலும் கூட பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இந்தியா ஏவியுள்ளது. இருப்பினும் நள்ளிரவுவாக்கில் ஏவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சரி ஐஆர்என்எஸ்எஸ்1 ஏ-வின் வேலை என்ன?

சரி ஐஆர்என்எஸ்எஸ்1 ஏ-வின் வேலை என்ன?

தரை மார்க்கமான போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து உள்ளிட்டவற்றைக் கண்காணித்து அதை சரியான திசையில் வழிநடத்துவதற்கான தகவல்களை அனுப்பும் நோக்கில்தான் இந்த செயற்கைக் கோள் செலுத்தப்படவுள்ளது.

1500 கிலோமீட்டர் தொலைவுக்கு

1500 கிலோமீட்டர் தொலைவுக்கு

இந்திய எல்லைக்குள்ளும், வெளியிலுமாக கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் தொலைவுக்குஇந்த செயற்கைக்கோளின் எல்கை இருக்கும்.

English summary
PSLV-C22 will launch India's first dedicated navigational satellite IRNSS-1A which will be part of constellation of seven satellite, six of which would be launched by 2014. The Indian Space Research Organisation (ISRO) which has been involved in over 100 missions will for the first time in its 50 years old history will launch a satellite in the night on Monday at 11.40 pm from Sriharikota in Andhra Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X