For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவில் திருவிழாவில் பரிதாபம்: தபசு மரம் மேலே விழுந்ததில் வயதான பெண் பலி

Google Oneindia Tamil News

சென்னை: ஆவடியில், கோவில் தபசுமரம் மேலே விழுந்ததில் வயதான பெண் ஒருவர் பலியானார். காயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருநின்றவூரை அடுத்த கொசவன்பாளையம், அருந்ததிபாளையம் பகுதியில் உள்ள மாதம்மாள் கோவில்களில், கடந்த ஒரு வாரமாக திருவிழா நடை பெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான் மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று முந்தினம் நடை பெற்றது. வழக்கம்போல் 18 அடி உயரம் கொண்ட ஒரு பனை மரத்தை 2 அடி ஆழம் குழி தோண்டி புதைக்கப்பட்டது. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அருகில் கட்டப்பட்ட குச்சி ஏணியி ஏறி சாமியை தரிசிப்பது ஐதீகம்.

நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில், 2 அடி ஆழத்தில் நடப்பட்டு இருந்த தபசு மரம்(பனை மரம்) திடீரென சாய்ந்து விழுந்தது. இதில், அம்மரத்தின் அடியில் நின்று கொண்இருந்த கொசவன்பாளையம், அண்ணா தெருவை சேர்ந்த சரோஜா(வயது 60) மற்றும் கொசவன்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த ராணி(47) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர் சரோஜா இறந்து விட்டதாகத் தெரிவித்தார். படுகாயம் அடைந்த ராணி, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர்.

English summary
A 60-year-old woman died after a tree fell on her at Thiruninravur on Saturday night. The tree was used in a drama scene during a temple festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X