For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்டோபர் முதல் இந்தியாவில் ஏர் ஏசியா விமான சேவை

By Mathi
Google Oneindia Tamil News

AirAsia to make flying more affordable in India: Tony Fernandes
டெல்லி: இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் ஏர்ஏசியா தமது விமான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனமானது இந்தியாவில் டாடா சன்ஸ் குழுமம் மற்றும் டெலெஸ்ட்ரா டிரேட்ப்ளேஸ் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த கட்டண விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. ஏர் ஏசியா வசம் 49 பங்குகளும் டாடா சன்ஸிடம் 30% பங்குகளும் டெலெஸ்ட்ராவிடம் எஞ்சிய 21% பங்குகளும் இருக்கும்.

ஏர்ஏசியா இந்தியா என்ற பெயரில் இயக்கப்படும் இந்த விமான சேவைக்கான ஒப்புதலை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங்கை, டோனி பெர்னாண்டஸ், டாடா சன்ஸின் ரத்தன் டாடா ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,வரும் அக்டோபர் மாதம் குறைந்த கட்டணத்திலான இந்திய விமான சேவையை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். திட்டமிட்டபடியே விமான சேவை தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏர் ஏசியா நிறுவனமானது சென்னையை முதன்மையிடமாகக் கொண்டும் அதற்கு அடுத்து கொச்சி, பெங்களூரைக் கொண்டும் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
AirAsia CEO Tony Fernandes on Tuesday said that the company is likely to start operations in October depending on regulatory approvals. Tony Fernandes and Ratan Tata met aviation minister Ajit Singh to talk about new appointments and developments in AirAsia India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X