For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடைந்த பனிச்சிகரங்கள்.. உருக்குலைந்த கேதர்நாத்.. நாசாவின் செயற்கைக் கோள் படங்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

டேராடூன்: இப்படியுமா உருக்குலைந்து போகும்? இத்தனை ஆயிரம் பேரா பலி? என உறைய வைக்கும் கேள்விகளுடன் சரித்திர சோகமாக வரலாற்றுப் பக்கங்களில் இணைந்து கொண்டிருக்கிறது உத்தர்காண்ட் வெள்ள சோகம்! இயற்கையை தன் விருப்பத்துக்கு வளைத்த மனித தவறுகளின் விளைவுதான் இந்தப் பெரும்சோகம் என்பதை பட்ட பின்பாவது புரிந்து கொள்வோமா என தெரியவில்லை..

உத்தர்காண்ட் உருக்குலைந்து போவதற்கு முன்பும் அதன் பின்புமாக ஜூன் 23-ந் தேதியன்று அமெரிக்காவின் நாசா மையம் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக கேதார்நாத் பள்ளத்தாக்கில் இயற்கை ஆடிய கோரத்தாண்டவம் பற்றிய புகைப்படங்கள், குறிப்பாக பனிச்சிகரங்கள் உடைந்து ஏரியிலும் மந்தாகினி ஆற்றிலும் விழுந்திருப்பதை உணர்த்தும் புகைப்படங்கள் நிலைமையின் விபரீதத்தை வெளிப்படுத்துகிறது.

அடித்துச் செல்லப்பட்ட ரம்பாரா

அடித்துச் செல்லப்பட்ட ரம்பாரா

இந்த முதல் படம் கெளரிகுண்ட் - கேதார்நாத் இடையேயான 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடையே இருக்கும் ரம்பாரா கிராமம்.. இந்தக் கிராமத்தில் பெரும்பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதை இப்படம் விவரிக்கிறது.

புதையுண்ட ரம்பாரா

புதையுண்ட ரம்பாரா

நிலச்சரிவில் சிக்கிய ரம்பாரா கிராமம் எதிர்கொண்டிருக்கும் சேதத்தை விவரிக்கும் படம் இது

காணாமல் போன கேதர்நாத்

காணாமல் போன கேதர்நாத்

இதுதான் கேதார்நாத்.. வெள்ளத்துக்கு முன்பு விரிவடைந்திருந்த கேதார்நாத் நகரம்.. பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரைந்து காணாமலேயே போயிருக்கிறது..

கைவிடப்பட்ட கேதார்நாத்

கைவிடப்பட்ட கேதார்நாத்

பெருவெள்ளத்தில் முற்று முழுதாக கேதார்நாத் நகரமே அடித்துச் செல்லப்பட்ட காட்சி இது..

உடைந்த பனிச்சிகரங்கள்

உடைந்த பனிச்சிகரங்கள்

கேதார்நாத் கோயிலுக்குப் பின்புறம் இருக்கக் கூடிய கேதார்நாத் பனிச்சிகரத்தின் சர்பாரி, கம்பேனியன் சிகரங்கள் உடைந்து மந்தாகினி ஆற்றில் விழுந்ததை குறிப்பிடும் புகைப்படங்கள் இவை

நிலைகுலைந்த கெளரிகுண்ட்

நிலைகுலைந்த கெளரிகுண்ட்

கேதார்நாத்தை சென்றடைவதற்கான முக்கியமான இடம் கெளரிகுண்ட். இதுவரை வாகனத்தில் செல்ல முடியும். பின்னர் 14 கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்தோ, டோலியிலோ செல்ல முடியும். கெளரிகுண்ட்டுக்கு ஏற்பட்ட கொடுமை இது..

English summary
New satellite images of Kedarnath clearly indicate the devastation which has taken place there. The images, taken by US based NASA's Landsat 8 satellite on 23 June 2013, when compared with old National Remote Sensing Centre (NRSC) images provided by the Uttarakhand Space Application Centre, show the scope of damage in the Mandakani valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X