For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லிக்கு பிளேன் ஓட்டி வந்த ரத்தன் டாடா

Google Oneindia Tamil News

Ratan Tata pilots plane to Delhi, government clearance for Air Asia soon
டெல்லி: மத்தியசிவில்விமான போக்குவரத்து அமைச்சர் அஜீத் சிங்கை இன்று ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைவர் டோனி பெர்னாண்டஸுடன் சந்திக்க வந்த டாடா குழும முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, விமானத்தை தானே ஓட்டி வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

டோனி பெரனாண்டஸ், ஏர் ஏசியா இந்தியாவுக்கான தலைமை செயலதிகாரி மித்து சாண்டில்யா ஆகியோரை விமானத்தில் ஏற்றியபடி பயணித்து டெல்லிக்கு வந்தார் டாடா. பின்னர் அவர்கள் அஜீத் சிங்கைச் சந்தித்துப் பேசினர்.

டாடாவே விமானம் ஓட்டி வந்தது அனைவரையும் வியப்பில்ஆழ்த்தியது. டாடா அடிப்படையில் ஒரு விமானி ஆவார். அவரிடம் அதற்கான லைசென்ஸும் உள்ளது. தனது குழும விமானங்களை அவர் அவ்வப்போது ஓட்டி வந்துள்ளார். மேலும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தின் தலைமை ஆலோசகரே டாடாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா விமானம் ஓட்டி வந்தது குறித்து டோனி கூறுகையில்,எனது சிறப்பு பைலட்டாக செயல்பட்டார் டாடா. என்னை அவர்தான் விமானத்தில்அழைத்து வந்தார். செலவு மிச்சம். ஆலோசகரே பைலட்டாகவும் இருப்பது நல்லதுதான் என்றார்.

English summary
While a speedy approval for AirAsia India does make news, it was Mr. Fernandes' "special pilot" who made bigger news earlier in the day. Mr. Fernandes was flown to Delhi by Ratan Tata himself. Mr Tata holds a pilot's licence and reportedly often flies the aircraft that his group owns. He is also the chief advisor on the AirAsia India board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X