• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

புதிய வெளியுறவுத் துறைசெயலராக சுஜாதா சிங் நியமனம்!

By Mathi
|

Sujata Singh named next foreign secretary
டெல்லி: நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலராக சுஜாதாசிங்கை நியமித்து பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவர் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பிறந்து ஐபி அமைப்பின் தலைவர், சிக்கிம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுர் பதவிகளை வகித்தவரான டி.வி. ராஜேஸ்வரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.,

மத்திய வெளியுறவுத் துறை செயலரான ரஞ்சன் மத்தாய் பதவிக் காலம் ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வெளியுறவுத் துறைச் செயலர் யார் என்ற யூகங்கள் எழுந்தன. சீனாவுக்கான இந்திய தூதர் எஸ்.ஜெய்சங்கரை வெளியுறவுச் செயலராக பிரதமர் நியமிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியுறவுத் துறையில் பணிமூப்பு அடிப்படையில் பலர் இருக்க அவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இதேபோல் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஜைமினி பகவதி, மேற்கு பிராந்திய செயலர் சுதிர் வியாஸ், வெளியுறவு அமைச்சக பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி ஆகியோரது பெயர்களும் புதிய வெளியுறவு செயலர் பதவிக்கு அடிபட்டன.

இந்நிலையில் ஜெர்மனுக்கான இந்திய தூதர் சுஜாதாசிங்கை புதிய வெளியுறவுத் துறை செயலராக நியமித்து பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பிறந்த ராஜேஸ்வர் மகள் சுஜாதா சிங்!

ஐபி எனப்படும் புலனாய்வு அமைப்பின் தலைவரும் சிக்கிம், மேற்குவங்கம், உத்தரபிதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர் பதவி வகித்தவர் டி.வி. ராஜேஸ்வர். தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் பிறந்த ராஜேஸ்வர் மகள்தான் சுஜாதா சிங். ராஜேஸ்வரின் 60வது ஆண்டு திருமண நிகழ்ச்சியில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டிருந்தார். சுஜாதாசிங்கின் கணவர் சஞ்சய்சிங், வெளியுறவுத் துறையில் கிழக்கு பிராந்திய செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Speculations over who will be the country’s next Foreign Secretary finally comes to an end with Prime Minister Office’s giving its nod for the appointment of India's Ambassador to Germany, Sujata Singh for the top job.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more