விஜயகாந்த் மீது நாகர்கோவிலில் 6 பிரிவுகளில் வழக்கு... கைதிலிருந்து தப்ப தலைமறைவு?

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக கூறி விஜயகாந்த் மீது நாகர்கோவில் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விஜயகாந்த் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று விஜயகாந்த் நேரில் ஆஜரானார்.
அப்போது கோர்ட்டுக்குள் மாஜிஸ்திரேட் சின்னராஜ் முன்பு தேமுதிக வக்கீல்களுக்கும், அரசு வக்கீல் ஞானசேகரனுக்கும் இடையே மோதல் மூண்டது. ஞானசேகரனுக்கு ஆதரவாக அதிமுக வக்கீல்கள் திரண்டு வந்தனர். இரு தரப்பும் நீதிபதி முன்னிலையிலேயே மோதிக் கொண்டனர். இதனால் நீதிபதி எழுந்து போய் விட்டார்.
இதுகுறித்து தற்போது அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஞானசேகரன், கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ‘நீதிமன்றத்தில் வைத்து என்னை விஜயகாந்த் மற்றும் அவருடன் வந்தவர்கள் ஐந்து பேர் தாக்கியதாக' குறிப்பிட்டுள்ளார்.
இதன் பேரில் தற்போது போலீஸார் விஜயகாந்த் உள்ளிட்ட 6 பேர் மீது அத்துமீறி உள்ளே நுழைதல், கண்ணாடி உடைப்பு உடை கிழிப்பு, கொலை மிரட்டல், கோஷ்டியாக வந்து மிரட்டுவது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடு்ததது, கொலை வெறித் தாக்குதல் என 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் விஜயகாந்த்தைக் கைது செய்ய நாகர்கோவில் போலீஸார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளாக தெரிகிறது. மேலும், சென்னை கோர்ட்டிலும் விஜயகாந்த்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரைக் கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்படும் என்று தெரிகிறது.
விஜயகாந்த் தற்போது எங்கிருக்கிறார் எ ன்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது. முன்ஜாமீன் கோரி அவர் சார்பில் மனு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications