For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் ஜெயில்!- சீனாவில் புதிய சட்டம் அமல்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பீஜிங்: பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளது.

சீனாவில் ஒரு குழந்தை திட்டம் 1970ம் ஆண்டுகளில் அமலுக்கு வந்தது. இதனால், பெரும்பாலான குடும்பங்களில் ஒரேயொரு வாரிசு மட்டுமே உள்ளார்கள். அவர்களும் இப்போது வேலைவாய்ப்பு தேடி வேறு நகரங்களுக்கு சென்று விடுகின்றனர்.

இளையவர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வீடுகளில் வயதான பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 100ல் 14 பெற்றோர்கள் இதுபோன்று கவனிப்பாரின்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம் உள்ளனர். 2050ம் ஆண்டு மூன்றில் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மூத்த குடிமக்களை பாதுக்காக்க புதிய சட்டம் ஒன்று சீனாவில் இயற்றப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களை சராசரியான இடைவெளியில் சென்று சந்தித்து அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கவனிக்கவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில், போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சீனாவில் சமூக இணையதளங்களில் இச்சட்டத்தை பலர் கேலி செய்துள்ளனர். சட்டம் போட்டு வயதானவர்களை கவனிக்கச் சொல்வது, தேசத்தை அவமதிப்பது போன்றதாகும் என்று இணையதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Today, however, Chinese parents are grappling with a more mundane problem — getting their children to visit.As older values erode and China’s society rapidly ages — by 2050, one in three people will be over 60 — how the country will provide for its senior citizens is a question that has sparked concern.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X