For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற நவ.3 வரை அவகாசம்: வெளிநாட்டு தொழிலாளர்கள் நிம்மதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ரியாத்: வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சவுதியில் இருந்து வெளியேற மேலும் 4 மாதகாலம் அந்நாட்டு அரசு அவகாசம் அளித்துள்ளது. இதனால் இந்தியா, வெளிநாட்டு தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

‘நிதாகத்' என்ற புதிய தொழிலாளர் அவசர சட்டத்தை சவுதிஅரேபிய அரசு பிறப்பித்தது. அதன்படி சவுதியில் செயல்படும் நிறுவனங்கள் 10 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு, ஒரு உள்நாட்டு இளைஞர் என்ற விகிதத்தில் பணியமர்த்த வேண்டும்.

இதனால் சவுதியில் பணியில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும். அதில் 75 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜூலை 3ம் தேதிக்குள் அவர்கள் சவுதியை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டு இருந்தது. சவுதியை விட்டு வெளியேறாதவர்கள் சிறையில் அடைக்கப்படும் நிலையில் இருந்தனர்.

இந்த நிலையில் நவம்பர் 3 வரை கால அவகாசம் வழங்கி சவுதி ஆரேபிய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

English summary
Saudi Arabia has given foreign workers another four months to obtain legal status in the country a day before a previous three-month amnesty expired, bringing respite to hundreds of thousands of expatriates who fear deportation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X