For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடமாகாண தேர்தல்: ராஜபக்சே கட்சி சின்னத்தில் புலிகளின் தயா மாஸ்டர்,கேபி, தமிழினி போட்டியிட மனு!

By Mathi
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சியின் சின்னத்தின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தயா மாஸ்டர், கேபி, தமிழினி ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சின்னத்தில் போட்டியிட மூவரும் விண்ணப்பித்த போதும் இவர்கள் கட்சி வேட்பாளர் நியமனக் குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று அமைச்சரும் அக்கட்சி பொதுச்செயலருமான மைத்திரிபால ஸ்ரீசேனா கூறிய்ள்ளார். மேலும் வடமாகாண சபைக்கான ராஜபக்சே கட்சியின் தேர்தல் அறிக்கையை தயா மாஸ்டர் தயார் செய்வார் என்று கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது தயா மாஸ்டர், இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தார். கேபியை தாய்லாந்தில் இலங்கை போலீசார் கைது செய்தனர். தமிழினி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றபோது கைது செய்யப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

English summary
Former LTTE international fund raiser and weapons procurer Selvarasa Pathmanathan alias KP, former LTTE women’s wing leader Subramaniam Sivakamy alias Thamilini and former LTTE spokesman and propaganda wing leader Velayutham Dayanthi alias Daya Master have applied for UPFA nominations for the upcoming Northern Provincial Council elections to be held in September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X