For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எகிப்து: போராட்டத்தை பதிவு செய்ய சென்ற பெண் நிருபர் பலாத்காரம்!

By Mathi
Google Oneindia Tamil News

Dutch journalist raped in Egypt's Tahrir Square
கெய்ரோ: எகிப்து அதிபர் மோர்ஸி பதவி விலகக் கோரி ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்தைப் பதிவு செய்ய சென்ற பெண் நிருபர் கூட்டத்தின் நடுவே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.

எகிப்தில் அதிபர் முகமது மோர்ஸி பதவியை விட்டு விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தலைநகர் கெய்ரோவின் தாஹ்ரீர் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இரவிலும் நீடித்த இந்தப் போராட்டத்தை பதிவு செய்ய டச்சு நாட்டைச் சேர்ந்த பெண் நிருபர் கூட்டத்துக்கு நடுவே சென்றிருக்கிறார்.

அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அதே பகுதியில் அந்தப் பெண் நிருபரை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் உயிருக்குப் போராடிய அப்பெண் நிருபரை இதர போராட்டக்காரர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்ட அந்த ஒரு இரவில் மட்டும் மொத்தம் 41 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A group of five men raped a Dutch journalist in Cairo’s central Tahrir Square as millions of protestors took to streets demanding the ouster of President Mohammed Morsi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X