For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புகை பிடிக்காதீங்க... ஆண்மை குறையும்... பேசி அட்வைஸ் செய்யும் சிகரெட் பாக்கெட்டுகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: வாழ்த்து அட்டைகளை திறந்தால் ஹேப்பி பர்த்தே பாட்டுப் பாடுவதைப் போல இனி சிகரெட் பாக்கெட்டுகளைத் திறந்தால், "ஆண்மைகுறையும், சிகரெட் பிடிக்காதீங்க!..." என்று அட்வைஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களால் அரசுகளுக்கும் பல்வேறு மறைமுக செலவினங்கள் ஏற்படுகின்றன. மருத்துவச் செலவு, சம்பந்தப்பட்டவரின் படிப்புக்காக செலவிடப்பட்ட தொகை என்று பல விதத்திலும் அரசுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி, டிவி, ரேடியோ, பத்திரிகைகள் ஆகியவற்றில் விளம்பரம் செய்யப்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புகைப்பவர்களை தடை செய்ய முடியவில்லை.

Talking cigarette packs are here. Will they make smokers butt out?

புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், ஆண்மைக் குறைவு, வாழ்நாள் குறைவது என்று பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும், சிகரெட் பிடிப்பவர்கள் அதை காதில் போட்டு கொள்வதே இல்லை.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஸ்டெர்லிங் பல்கலைக்கழகத்தின் புகையிலை கட்டுப்பாடு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிவுரை சொல்லும் சிகரெட் பாக்கெட்டுகளை தயாரித்துள்ளனர். சிகரெட் பாக்கெட்டை திறந்தவுடன், ‘ஆண்மை குறைந்துவிடும், புகை பிடிக்காதீர்கள்' என்றும், சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அறிவதற்கான தொலைபேசி எண்ணையும் குறிப்பிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை தயாரித்த விஞ்ஞானிகள் கூறுகையில், ‘‘புகைப்பிடிப்பதை கைவிட வலியுறுத்தும் விளம்பரங்களை கூட, சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மிக அழகாக தங்கள் பாக்கெட்டில் அச்சடித்து அதை ஒன்றும் இல்லாததுபோன்று ஆக்கிவிடுகின்றன. இதேபோல் சிகரெட் பாக்கெட்டையும் மிக அழகாக தயாரிக்கின்றனர். வரும் காலத்தில் பாட்டு பாடும், மியூசிக் ஒலிக்கும் சிகரெட் பெட்டிகள் வரலாம். அதற்கு முன்னதாக அந்த தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம்'' என்றனர்.

பேசும் பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளில், அதை திறந்தவுடன், ‘ஹேப்பி பெர்த்டே...' பாட்டு பாடும். அதே தொழில்நுட்பம்தான் இந்த சிகரெட் பாக்கெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சிகரெட் பாக்கெட்டை, இளம் பெண்கள் மற்றும் ஆண்களிடம் கொடுத்து கருத்து கேட்டபோது, இது சிகரெட் பழக்கத்தை கைவிடும் விதத்தில் தங்கள் சிந்தனையை தூண்டுகிறது என்று கூறியுள்ளனர்.

ஸ்காட்லாந்தில் இந்த பேசும் சிகரெட்டுகளைப் பயன்படுத்தி புகைப்பவர்களின் எண்ணிக்கையை 23 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதெல்லாம் சரிதான் இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தினால் இதைக் கேட்டு எத்தனை பேர் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடுவார்கள் என்று தெரியலையே?.

English summary
That’s the belief of researchers at the University of Stirling in Scotland who have come up with cigarette packages that play a recorded message each time they’re opened. The message warns smokers about fertility risks and gives a help-line phone number for further information on quitting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X