For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவர் வாழ்த்தினால் தோல்வி நிச்சயம்!

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் எந்த ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனை அல்லது அணியை வாழ்த்தினாலும் அவர்கள் தோல்வி அடைந்துவிடுகிறார்களாம்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடிய முன்னணி வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து அல்லது காயம் ஏற்பட்டு வெளியேறியுள்ளனர்.

அவர்களில் பலர் ஆட்டம் நடக்கும் இடத்தில் உள்ள புல்லின் மீது குறை கூறியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான லாரா ராப்சனும் தோல்வி அடைந்துள்ளார்.

வாழ்த்திய காமரூன்

வாழ்த்திய காமரூன்

இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் லாரா ராப்சனை வாழ்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வெற்றி பெற வாழ்த்துக்கள் ராப்சன். நீண்ட காலம் கழித்து விம்பிள்டன் போட்டிகளில் 4வது சுற்றில் நுழைந்துள்ள 51வது இங்கிலாந்து பெண் நீங்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

4வது சுற்றில் தோல்வி

4வது சுற்றில் தோல்வி

காமரூன் வாழ்த்திய சில மணிநேரத்திலேயே ராப்சன் 4வது சுற்றில் விளையாடி தோல்வி அடைந்தார்.

லூயி ஹாமில்டன்

லூயி ஹாமில்டன்

கார் பந்தய வீரர் லூயி ஹாமில்டனும் காமரூன் வாழ்த்திய பிறகு பந்தயத்தில் தோல்வி அடைந்தார்.

ஆன்டி முர்ரே

ஆன்டி முர்ரே

டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேவை காமரூன் வாழ்த்திய பிறகு அவரும் தோல்வியைத் தழுவினார்.

ரக்பி, கால்பந்து அணிகள்

ரக்பி, கால்பந்து அணிகள்

டேவிட் காமரூனிடம் வாழ்த்து பெற்ற பிறகு இங்கிலாந்து ரக்பி மற்றும் கால்பந்து அணிகளும் தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
British No.1 Laura Robson crashed out of Wimbledon hours after British PM Divid Cameon wished her all the best.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X