For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விக்கிலீக்ஸ் மீதான ‘பொருளாதார தடை’யை நீக்கியது மாஸ்டர் கார்டு!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அம்பலப்படுத்தியதால் அந்த இணையதளத்துக்கு மாஸ்டர்கார்டு மூலம் நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ்.. அமெரிக்காவை அலற வைத்த இணையதளம்.. உலகம் முழுவதும் அமெரிக்க தூதரகங்கள் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டது? பிற நாடுகளின் தலைவர்களை எப்படியெல்லாம் விமர்சித்தது? ஏன பல்லாயிரக்கணக்கான தகவல்களை விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தமது தளத்தின் மூலம் வெளியிட்டார். இதனால் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் செம கடுப்பாகிப் போகின. அசாஞ்சே மீது வெளிநாடுகளில் பாலியல் வழக்குகள் தொடரப்பட்டு அவரை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.

Julian Assange

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு டிசம்ப மாதம் விசா, பேபால், பேங்க் ஆப் அமெரிக்கா, வெஸ்டர்ன் யூனியன்ஸ் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவற்றின் மூலமாக விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வது தடை செய்யப்பட்டது. இதனால் விக்கிலீக்ஸ் செயல்பாடுகள் முடங்கும் நிலைக்குப் போனது. இந்த பொருளாதாரத் தடையை அசாஞ்சே மிகக் கடுமையாக விமர்சித்தும் இருந்தார்.

இதனிடையே அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் தளத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை மாஸ்டர் கார்டு நீக்கியிருக்கிறது என்று விக்கிலீக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
MasterCard's financial blockade against WikiLeaks has been lifted more than two years after the credit card company first took measures to keep their customers from supporting the anti-secrecy website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X