For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

80 கோடி மக்களுக்கு 1 ரூபாயில் அரிசி, கோதுமை, உணவு தானியம்: காங்கிரசின் தேர்தல் அட்டாக்!

By Chakra
Google Oneindia Tamil News

President signs ordinance on Food Security Bill
டெல்லி: உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று அனுமதியளித்து கையெழுத்திட்டார்.

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற விடாமலம நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளி செய்து வந்ததையடுத்து இந்த மசோதாவை அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்து, பின்னக் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக குடிரயசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த உணவு பாதுகாப்பு மசோதாவில் பிரணாப் முகர்ஜி இன்று காலை கையெழுத்திட்டார். இதன் மூலம், உணவு பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றுவதற்கு முன்பே, குடியரசுத் தலைவரின் கையெழுத்தை பெற்றுவிட்டது.

இதன்மூலம் நாட்டின் 3ல் 2 பங்கு மக்களுக்கு, சுமார், 80 கோடி பேருக்கு, 5 கிலோ அரிசி, கோதுமை, பருப்புகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் மிகக் குறைந்த விலையில், அதாவது கிலோ ரூ. 1 முதல் 3 ரூபாய்க்கு வழங்கப்படும்.

இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ. 125,000 கோடியை செலவிடவுள்ளது.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் திட்டம் தங்களுக்கு பெருமளவில் ஓட்டுக்கள் பெற கை கொடுக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து, நாடு முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலையும், தினந்தோறும் ரூ. 100 வரை ஊதியமும் கிடைக்கச் செய்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்துக் காட்டியது காங்கிரஸ்.

இந் நிலையில் இப்போது மாபெரும் உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அமுக்க காங்கிரஸ் நினைக்கிறது. இதனால் தான் இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் எதிர்க் கட்சிகள் அமளி செய்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் தான், இதை ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அவசரச் சட்டம் மூலம் அமலாக்க மத்திய அரசு துணிந்துவிட்டது.

இந்த மசோதா அடுத்த நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஜனாதிபதி ஒப்புதல் தந்துவிட்டதால், அதற்கு முன்னதாகவே இந்தத் திட்டம் அமலுக்கு வந்துவிடவும் வாய்ப்புள்ளது.

இந்த மசோதா குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அ‌ஜய் மக்கான். உணவு பாதுகாப்பு சட்டத்தால் நாட்டில் ஊட்டச்சத்து பிரச்சனை தீரும். இந்தத் திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தால் அரசுக்கு இந்தாண்டு நிதி பற்றாக்குறையோ, நிதிச்சுமையோ ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.

இது தொடர்பாக மத்திய உணவுத்துறை இணையமைச்சர் தாமஸ் கூறுகையில், உணவுப் பாதுகாப்பு சட்டம் நிற‌ைவேற்றப்பட்டால் நாட்டில் 67 சதவீதம் மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.

இது குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இத்தனை காலம் சும்மா இருந்துவிட்டு இந்த மசோதாவை இப்போது மத்திய அரசு கொண்டு வருவதன் காரணம் என்ன என்று கேட்டுள்ளார்.

English summary
President Pranab Mukherjee on Friday signed the ordinance on food security after due consideration. Following the presidential consent, the bill would be now presented before the Parliament when it convenes for the Monsoon Session. Brushing aside political opposition, Government had issued the ordinance to give nation's two-third population the right to get 5 kgs of foodgrains every month at highly subsidised rates of Rs 1-3 per kg. The Food Security programme when implemented will be the biggest in the world with the government spending estimated at Rs 125,000 crore annually on supply of about 62 million tonnes of rice, wheat and coarse cereals to 67 per cent of the population.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X