For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளவரசன் மீது மோதியது கோவை - குர்லா ரயிலா.. டிரைவரிடம் விசாரிக்க முடிவு

Google Oneindia Tamil News

Railway police to grill Coimbatore - Kurla exp train engine driver
தர்மபுரி: இளவரசன் பிணமாக கிடந்த இடத்தில் சம்பந்தப்பட்ட நேரத்தில் கோவை - குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்திருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. எனவே அந்த ரயில் மோதிதான் இளவரசன் இறந்தாரா என்பதை உறுதி செய்ய அந்த ரயில் என்ஜின் டிரைவரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாம் ரயில்வே போலீஸ்.

இளவரசன் மரணம் மர்மமாக உள்ளது.தற்கொலை என்று போலீஸ் தரப்பி்ல கூறி முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளனர். ஆனால் இது கொலையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் தரப்பில் கருதப்படுகிறது. எனவே இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறது ரயில்வே காவல்துறை.

சம்பந்தப்பட்ட நேரத்தில் கோவை - குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் கடந்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த ரயில் என்ஜின் டிரைவரிடம், விசாரணை நடத்த காவல்துறை தீர்மானித்துள்ளது.

மேலும் மரணத்தை சந்திப்பதற்கு முன்புயாருடன் இளவரசன் பேசினார் என்பதை அறிய அவரது செல்போனை ஆய்வு செய்யவும், செல்போன் டவரைஅடையாளம் காணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவை இளவரசன் மரணம் எப்படி நேர்ந்தது என்பதைக் கண்டறிய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

28 பள்ளிகளுக்கு விடுமுறை

இதற்கிடையே, தர்மபுரியில் 28 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, தர்மபுரி, கிருஷ்ணாபுரம், நாயக்கன்கோட்டை பகுதிகளில் உள்ள 28 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Railway police to grill Coimbatore - Kurla exp train engine driver in Ilavarasan case, to ensure the cause of the death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X