For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவு பாதுகாப்பு மசோதாவை பார்லி.யில் எதிர்க்கமாட்டோம்: ராஜ்நாத் சிங்

By Mathi
Google Oneindia Tamil News

Rajnath Singh says BJP won't oppose Food Security Bill in Parliament
நாக்பூர்: கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் உணவு பாதுகாப்பு மசோதாவை பார்லிமென்ட்டில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்காது என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மசோதா பார்லிமென்ட்டில் நிலுவையில் இருக்கும் போது திடீரென இதற்காக அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்து சென்ற பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மழைக்கால பார்லிமென்ட் கூட்டத் தொடரில் உணவு பாதுகாப்பு மசோதாவை நாங்கள் எதிர்க்க மாட்டோம். ஆனால் சில திருத்தங்களைக் கொண்டுவர வலியுறுத்துவோம். இந்த மசோதாவுக்காக அவசர சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. ஜனநாயகத்தில் இது மிகப் பெரிய கூத்தாக இருக்கிறது.

பார்லிமென்ட் முடங்கிப் போவது காங்கிரஸ் கட்சிதான் காரணமே தவிர எதிர்க்கட்சிகள் அல்ல என்றார்.

English summary
Terming the ordinance promulgated by Union Cabinet to implement Food Security Bill as a "cruel joke" on democracy, BJP president Rajnath Singh on Saturday said his party would not oppose the passage of the Bill in Parliament but seek amendments to it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X