For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஷ்ரத் ஜஹான் பற்றி விமர்சனம்: பாஜகவின் மீனாக்ஷி லேகி மன்னிப்பு கோர வலியுறுத்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

BJP leader's comment on Ishrat Jahan outrages women
டெல்லி: குஜராத் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் பற்றி விமர்சனம் செய்த பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி மன்னிப்பு கோர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் புறநகரில் 2004ஆம் ஆண்டு மும்பை மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் 4 பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல திட்டமிட்டிருந்தனர் என்று போலீசார் கூறியிருந்தனர். நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது குற்றப்பத்திரிகையில் என்கவுன்ட்டர் சம்பவம் "போலியானது" என்றும் போலீசார் திட்டமிட்டு அடைத்து வைத்து பின்னர் சுட்டுக் கொன்றனர் என்ற் கூறப்பட்டது.

இது தொடர்பாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷி லேகி, இஷ்ரத் ஜஹானை விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்தும் மீனாக்ஷி லேகி மன்னிப்பு கோரவும் வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்துக்கு மனு அனுப்பி வைத்துள்ளனர்.

இஷ்ரத் விவகாரத்தில் இன்னும் என்னென்ன பூதங்கள் வெடிக்குமோ?

English summary
Over 100 women have sought an apology from BJP spokesperson Meenakshi Lekhi for making sexist remarks on Ishrat Jahan, the 19-year-old college student, who was killed by the police on June 15, nine years ago, on the outskirts of Ahmedabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X