For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்பை போதித்த புத்தரின் ஆலயத்தில் ரத்தக்களறி!

By Siva
Google Oneindia Tamil News

புத்தகயா: புத்தகயா குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி கோவிலில் நேற்று காலை 5.30 மணி முதல் 6 மணி வரை 9 குண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த பிக்குகள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு நிறுவனத்தார் நேற்று மாலை புத்தகயா சென்றனர். இந்நிலையில் குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் இன்று விசாரணை நடத்துகின்றனர். மகாபோதி கோவிலை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று டெல்லி போலீசார் பீகார் போலீசாரை கடந்த அக்டோபர் மாதமே எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கோவில்

கோவில்

குண்டுவெடிப்பு நடந்த மகாபோதி கோவிலை பார்வையிடும் பாதுகாப்பு படையினர்.

தேசிய புலனாய்வு நிறுவனத்தினர்

தேசிய புலனாய்வு நிறுவனத்தினர்

மகாபோதி கோவிலை தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் நேற்று மாலை பார்வையிட்டனர்.

நிதிஷ் கொடும்பாவி எரிப்பு

நிதிஷ் கொடும்பாவி எரிப்பு

புத்தகயா குண்டுவெடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கொடும்பாவியை எரித்தனர்.

மும்பை

மும்பை

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் குண்டுவெடிப்பை கண்டித்து மும்பையில் உள்ள சைத்யாபூமி தாதாரில் போராட்டம் நடத்தினர்.

கொல்கத்தா

கொல்கத்தா

புத்தகயா குண்டுவெடிப்பை கண்டித்து கொல்கத்தாவில் புத்த பிக்குகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.

குண்டு

குண்டு

புத்தகயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயல் இழக்கச் செய்த வெடிகுண்டு நிபுணர்கள்.

பார்வையிடல்

பார்வையிடல்

போதி மரத்திற்கு பின்னால் உள்ள இடத்தை பார்வையிட்ட பாதுகாப்பு படையினர்.

புத்த பிக்கு

புத்த பிக்கு

குண்டுவெடிப்பில் காயம் அடைந்த புத்த பிக்குவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மகாபோதி கோவில்

மகாபோதி கோவில்

புத்தமத கோவிலில் குண்டுவெடிப்புக்கு பிறகு தரையில் சிதறிக் கிடக்கும் ரத்தம்.

புத்த மடம்

புத்த மடம்

டெர்கர் மடத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்த வெடிகுண்டு நிபுணர்கள்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

குண்டுவெடிப்புக்கு பிறகு கோவிலுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

காயமடைந்த புத்த பிக்கு

காயமடைந்த புத்த பிக்கு

குண்டுவெடிப்பில் காயம் அடைந்த மற்றொரு புத்த பிக்குவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் புத்த பிக்குகள், அதிகாரிகளுடன் பேசிய நிதிஷ் குமார்.

வரைபடங்கள்

வரைபடங்கள்

குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் 2 குற்றவாளிகளின் வரைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

English summary
Bihar police released the CCTV footage of the Bodhgaya blasts and arrested one supect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X