For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீடு? உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை அதிகரிப்பதற்கு உள்துறை அமைச்சகம் கடும் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக தொழிற்கொள்கை மற்றும் வளர்ச்சித்துறைக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, தொலைதொடர்பு, தகவல் தொடர்பு சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை குறிப்பிட்ட அளவுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறு அனுமதித்தால் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் வாய்ப்பு உருவாகும். அது, நம் நாட்டின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இதேபோல் மற்றொரு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதத்தையும் மீண்டும் அனுப்பி வைக்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது.

English summary
The Home Ministry has raised serious concern over hiking FDI cap in defence, space, telecom and a few other areas, contending that flow of funds from countries like China in these sectors may compromise country's security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X