For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை வடமாகாண சபை தேர்தலில் கேபி, தமிழினி போட்டியிடவில்லை: தயா மாஸ்டர்

By Mathi
Google Oneindia Tamil News

KP,Thamilini not contest in Northern Province elections: Daya Master
கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கேபி மற்றும் தமிழினி போட்டியிடவில்லை என்று தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கேபி, தமிழினி மற்றும் தயா மாஸ்டர் ஆகியோர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஏட்டுக்கு பேட்டி அளித்திருக்கும் தயா மாஸ்டர், எனக்குத் தெரிந்தவரை கேபி, தமிழினி ஆகியோர் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை. நான் விண்ணப்பித்து இருக்கிறேன். இருப்பினும் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிதான் வேட்பாளர்களை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

மேலும் கைவிடப்பட்ட சிறார்களை பராமரிக்கும் இல்லங்களை நடத்தவே கேபி விரும்புவதாகவும் தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை என்றும் கேபி தரப்பு வட்டாரங்களும் கூறியுள்ளன.

English summary
Former LTTE Media Co ordinator Daya Master told, Thamilini and KP have not applied to the UPFA for the Northern Province elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X