For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்… 7.2 ரிக்டெர் ஆக பதிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

7.2 magnitude earthquake hits Papua New Guinea: USGS
மெல்போர்ன்: தென்மேற்கு பசிபிக் கடற்பகுதியில், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலையில் அடுத்தடுத்து இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.35 மணிக்கு நியூ அயர்லாந்து தீவில் இருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தரைமட்டத்தில் இருந்து 379 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் நியூ அயர்ல்ந்து மற்றும் தரோன் பகுதிகள் கடுமையாக குலுங்கின. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு நியூ பிரிட்டன் பகுதியில் உள்ள கண்ட்ரியன் நகரை இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கம் தரை மட்டத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது, இது ரிக்டர் அளவில் 6.8 என பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் நகரின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஏற்பட்டதால் அதிகமான பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. மேலும்,சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

பப்புவா நியூ கினியா, நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும் ‘நெருப்பு வளையம்' பகுதிக்குள் அடங்கியுள்ள நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 6.8 magnitude earthquake hit Papua New Guinea in the early hours today, according to the US Geological Survey, after a 7.2 quake struck off the country's northeast coast just hours before. The 6.8 quake occurred near the town of Kandrian, on the island of New Britain, at 6:30 am (0200 IST
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X