For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்பொரு காலத்தில் வானில் இரு நிலாக்கள் இருந்ததாம்...

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: தற்போது நாம் வானத்தில் பார்க்கும் நிலா முன்பு இரண்டாக இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலவாக மாறியதாகவும் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் பொதுவாக சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்கும் இரண்டு நிலாக்கள் இருந்ததாக தற்போது ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிறிய நிலாக்கள் இணைந்தே தற்போது வானத்தில் காணப்படும் பெரிய நிலா உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நிலாக்கள்...

இரண்டு நிலாக்கள்...

இரு நிலாக்கள் சேர்ந்து ஒரே நிலாவாக ஆன நிகழ்வு சில மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நிகழந்திருக்க வேண்டும் என கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒன்றோடொன்று ஈர்த்தது...

ஒன்றோடொன்று ஈர்த்தது...

2வது நிலா தற்போது நமது கண்களுக்கு தெரிவதில்லை என்ராலும், இரு கோள்களும் மிதமான வேகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து 2வது நிலாவை அதனுடன் சுற்றி வந்த நிலா ஈர்த்துக் கொண்டு விட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மலைகள் உருவானது...

மலைகள் உருவானது...

இரண்டு நிலா மோதிக் கொண்டதின் விளைவாகவே, தற்போது உள்ள நிலவின் மேற்பரப்பில் மலை போன்ற உயர் நிலங்கள் உருவாகி உள்ளதாகவும், ஈர்ப்பு சக்தி அலைகளால் நிலாவின் கூட்டுப் பகுதி ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுவதாகவும் அவர்களது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாம்.

முன்பு இருபது கோள்கள்...

முன்பு இருபது கோள்கள்...

அதுபோலவே, நமது சூரியக் குடும்பத்திலும் முன்னர் இருபது கோள்கள் இருந்திருக்கலாம் எனவும் காலப்போக்கில் அவை ஒன்றோடொன்று இணைந்து தற்போது எட்டுக் கோள்களாக சுருங்கியிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Earth once had two moons, the one visible today and a much smaller 'twin' that crashed to form one lunar body, scientists claim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X