For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'அல்டா விஷ்டா’ சர்ச் என்ஜினை மூடிய யாஹூ!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒரு காலத்தில் கோலோச்சி வந்த சர்ச் என்ஜினுக்கு தற்போது மூடு விழா காணப்பட்டுள்ளது. அந்தப் புண்ணியத்தை அதன் சொந்த நிறுவனமான யாஹூ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்டர்நெட்டில் இன்று எதைத் தேடினாலும் கிடைக்கும். ஆனால், அதற்கு வழி வகுப்பதுதான் இந்த சர்ச் என்ஜின்களின் பணி.

கூகுள் இன்று முன்னணி தேடுதல் வழியாக இருக்கின்றபோதிலும், ஒரு காலத்தில் அல்டா விஸ்டாதான் முன்னணி சர்ஜ் என்ஜினாக இருந்து வந்தது. தற்போது அதை மூடி விட்டது அதை நிர்வகித்து வந்த யாஹு நிறுவனம்.

திங்கள்கிழமையுடன் பை..பை...

திங்கள்கிழமையுடன் பை..பை...

திங்கள்கிழமையன்று அல்டா விஸ்டா சர்ச் என்ஜின் சேவையை நிறுத்தி விட்டது யாஹு.

பிறப்பிடம் கலிபோர்னியா...

பிறப்பிடம் கலிபோர்னியா...

1995ம் ஆண்டு கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த சர்ச் என்ஜின்தான் அல்டா விஸ்டா.

கூகுளுக்கு அண்ணன்...

கூகுளுக்கு அண்ணன்...

கூகுள் பிறப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பு இது உருவாக்கப்பட்டதாகும்.

ஓரம் கட்டிய கூகுள்...

ஓரம் கட்டிய கூகுள்...

ஆனால் கூகுளின் வருகை அல்டா விஸ்டாவுக்கு பின்னடைவாகப் போய் விட்டது.

யாஹூ வசமானது

யாஹூ வசமானது

2003ம் ஆண்டு அல்டா விஸ்டாவை யாஹு நிறுவனம் கையகப்படுத்தியது. இதற்காக அது கொடுத்த தொகை 1.7பில்லியன் டாலராகும்.

இறுதி அறிவிப்பு...

இறுதி அறிவிப்பு...

கடந்த மாதம்தான் அல்டா விஸ்டாவை நிறுத்தும் முடிவை யாஹு அறிவித்தது.

அழகான குழந்தை... புறக்கணித்த பெற்றோர்

அழகான குழந்தை... புறக்கணித்த பெற்றோர்

இன்டர்நெட் சர்ச் என்ஜின் துறையில் நிபுணரான டேனி சல்லிவன் இதுகுறித்துக் கூறுகையில், அழகான பிரைட்டான குழந்தை அல்டா விஸ்டா. ஆனால் பெற்றோரின் புறக்கணிப்பு காரணமாக இன்று மூடப்பட்டு விட்டது என்றார்.

உன்னை மறக்க மாட்டோம் அல்டா...

உன்னை மறக்க மாட்டோம் அல்டா...

மேலும் சல்லிவன் கூறுகையில், உன்னை அனைவரும் விரும்பினோம். நீயும் விருப்பத்துக்குரியதாகவே இருந்தாய். உன்னை விட மக்களுக்கு மனசில்லை. ஆனால் உன்னை புறக்கணித்து இப்போது மூடி விட்டார்கள். கூகுளின் வேகத்திற்கு உன்னால் ஈடு கொடுக்க முடியாமல் போனது துரதிர்ஷடவசமானதுதான் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சல்லிவன்.

8வது மூடு விழா

8வது மூடு விழா

யாஹு நிறுவனம் மூடியுள்ள 8வது சேவை அல்டா விஸ்டா. ஏற்கனவே 7 சேவைகளை அது நிறுத்தியுள்ளது நினைவிருக்கலாம்.

கூகுள்தான் டாப்...

கூகுள்தான் டாப்...

அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர் கூகுள் சர்ச்சைத்தான் விரும்புகின்றனர். அடுத்து இடத்தில் பிங், யாஹு ஆகியவை உள்ளன. அல்டா விஸ்டாவுக்கு அமெரிக்க மக்கள் மனதில் பெரிய இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Once up on a time, there was a popular search engine called AltaVista. It lives no more. On Monday, its owner Yahoo sent AltaVista.com to the Internet graveyard to rest alongside order-almost-anything venture Kozmo.com and the butler from Ask Jeeves. Palo Alto, California-based AltaVista was introduced in 1995, three years before Google was founded. Eclipsed by Google in the early 2000s, AltaVista's star had already faded by the time Yahoo acquired it as part of its $1.7 billion purchase of Overture Services in July 2003. Overture had bought AltaVista earlier that year from Massachusetts-based CMGI..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X