For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்னிய செலாவணி மோசடி..கனிமொழிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது அமலாக்கப் பிரிவு?

By Mathi
Google Oneindia Tamil News

2g scam: ED likely to file chargesheet against Kanimozhi, say sources
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழிக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கில் குற்றப் பத்திரிகையை அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் ரூ200 கோடியை கலைஞர் டிவி பெற்றது என்ற குற்றச்சாட்டில் அதன் பங்குதாரராக இருந்த கனிமொழி கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனார். பின்னர் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலையானார். இது தொடர்பான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கலைஞர் டிவியின் மற்றொரு பங்குதாரரரும் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு அம்மாள் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் அமலாக்கப் பிரிவு கலைஞர் டிவி ரூ200 கோடி பெற்ற விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு அன்னிய செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கனிமொழிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறது அமலாக்கப் பிரிவு என்று கூறப்படுகிறது.

அப்படி அன்னிய செலாவணி மோசடி புகாரில் கனிமொழிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அவருடைய சொத்துகளும் பறிமுதல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

English summary
Enforcement Directorate (ED) is likely to file chargesheet against DMK MP Kanimozhi in money laundering case related to the 2g scam, sources told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X